சென்னை, ஜூலை 19- தமிழ்நாட்டில் பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வில் 19 ஆயிரத்து 193 மாணவர் களுக்கு சேர்க்கை ஆணை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதில் 11 ஆயிரத்து 359 மாண வர்களுக்கு தற்காலிக சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அண்ணா பல்கலைக்கழ கத்தின் கீழ் இயங்கும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1.90 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் 2.42 லட்சம் பேர் கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதி பெற்றனர். பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வில் 39 ஆயிரத்து 145 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 34 ஆயிரத்து 301 பேர் பங் கேற்று பிடித்தமான கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். அவர்களில் 32 ஆயி ரத்து 663 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் 2,491 மாண வர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்த நிலையில் 2,462 பேருக்கு ஒதுக்கீடு வழங் கப்பட்டது. தொழிற்கல்வி பிரிவில் 1,586 பேர் கல்லூரிகளைத் தேர்வு செய்த நிலையில் 1,392 பேருக்கு ஒதுக்கீடு அளிக்கப் பட்டுள்ளது. சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 23-ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். தற்காலிக ஆணை பெற்றவர்கள் ஜூலை 23-க்குள் உதவி மையம் சென்று சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். கல்லூரி மாற்றம் கோரும் மாணவர் களுக்கு ஜூலை 26-ஆம் தேதி ஒதுக்கீடு வழங் கப்படும். ஒட்டுமொத்தமாக பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20- ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.