tamilnadu

img

திருவாரூர் மாவட்டத்தில் மாதர் சங்க 17 ஆவது ஒன்றிய மாநாடுகள்

திருவாரூர் மாவட்டத்தில் மாதர் சங்க  17 ஆவது ஒன்றிய மாநாடுகள்

திருவாரூர், ஆக 3-  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17 ஆவது ஒன்றிய மாநாடு, திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக (ஒன்றியம், நகர மாநாடு) அமைப்பின் வெண்கொடி ஏற்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒன்றிய மாநாட்டில், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பவானி, மாவட்டச் செயலாளர் பா.கோமதி மற்றும் மாவட்ட துணை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினர்.  முன்னதாக மூத்த உறுப்பினர்கள், அமைப்பின் வெண்கொடியை ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தனர்.  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய மாநாட்டில் 15 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.  அதில் தலைவராக வி.புனிதா, செயலாளராக ஜி.கலைச்செல்வி, பொருளாளராக எஸ். ஆரோக்கிய மேரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனார், திருவாரூர் ஒன்றிய மாநாட்டில் 15 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது.  அதில், தலைவராக ஆர்.விக்டோரியா, செயலாளராக திரிபுரா, பொருளாளராக பி.அம்பிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனார்.  வலங்கைமான் ஒன்றிய மாநாட்டில் 11 பேர் கொண்ட ஒன்றிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் தலைவராக ஆர்.சங்கீதா, செயளாலராக எஸ்.சத்யபாமா, பொருளாளராக இ.மைதிலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  கொரடாச்சேரி ஒன்றிய, மாநாட்டில் 13 பேர் கொண்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில், தலைவராக ரதி, செயலாளராக ராஜேஸ்வரி, பொருளாளராக ஜெயந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  கொரடாச்சேரியில் நடைபெற்ற ஒன்றிய மாநாட்டில் 75 பெண்கள் கலந்து கொண்டது சிறப்பாக அமைந்தது.  படித்த பெண் பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்திட வேண்டும். பெண் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.