tamilnadu

img

“சிபிஐ(எம்) டைரி” நூல் வெளியீட்டு விழா

“சிபிஐ(எம்) டைரி”  நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை, ஜூலை 26-  “சிபிஐ(எம்) டைரி - இளம் கம்யூ னிஸ்டுகளின் கையேடு” என்கிற நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. வெளியீட்டு விழாவிற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். கோவை ஆர்.ஹரிஹரன் எழுதிய “சிபிஐ(எம்) டைரி - இளம் கம்யூனிஸ்ட்டுகளின் கையேடு” என்கிற நூலை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட, மத்தியக் குழு உறுப்பினர் பாலபாரதி பெற்றுக் கொண்டார். நூல் குறித்து பெ.சண்முகம் பேசு கையில்,”கட்சியின் வரலாற்றை ரத்தின சுருக்கமாக வண்ணப் படங்க ளோடு இந்தப் புத்தகம் வெளிவந்துள் ளது. இந்தப் புத்தகத்தை எழுதிய ஆர்.ஹரிஹரன், பதிப்பாளர் எஸ்.கவிவர்மன், வடிவமைப்பாளர் வெ. தண்டபாணி ஆகியோர் பாராட்டத் தக்கவர்கள் என்றார். நூலின் சிறப்புப் பிரதிகளை பெற்றுக்கொண்டு தமுஎகச மாநில துணைத் தலைவர் கவிஞர் நா.முத்து நிலவன், மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் ஜீவி, உழைக்கும் பெண் கள் ஒருங்கிணைப்பாளர் என்.கண் ணம்மா, அறிவியல் இயக்க மாநிலக் குழு உறுப்பினர் அ.மணவாளன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக பதிப்பாளர் எஸ்.கவி வர்மன் வரவேற்க, வடிவமைப்பாளர் வெ.தண்டபாணி நன்றி கூறினார்.