tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம்: வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் கைது

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோடி அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் பொதுமக்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் 25க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் உத்தரபிரதேசத்தில் இணையம் முடக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ் தில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று உத்தர பிரதேச பவனுக்கு அணிவகுத்துச் சென்றபோது தில்லி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.