புதுதில்லி:
இணையதள வேகத்தை சோதனை செய்யும் தளமாக உள்ள ‘ஓக்லா’, உலகம் முழுவதும் 139 நாடுகளில் மேற் கொண்ட இணையதள வேகவரம்பு பட்டியலை (‘Ookla’Speedtest Global Index) அண்மையில் வெளியிட்டுள்ளது.இதில், இந்தியா உலகளவில் 131-ஆவது இடத்தைப் பிடித்து,மிகவும் மோசமான இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதாவது, இணையதள வேகத்தில், பாகிஸ்தான், நேபாள நாடுகளை விடவும் பின்தங்கிய நிலையில் இந்தியா இருப்பது தெரியவந்துள்ளது.உலகம் முழுவதும் இணையதளத்தின் வேக வரம்பை ஆய்வு செய்து மாதாந்திர அறிக்கை வெளியிடுவது ‘ஓக்லா’ நிறுவனத்தின் வழக்கம். அந்த வகையில்தான், தற்போது அக்டோபர்மாதத்திற்கான பட்டியலை ஓக்லா நிறுவனம் வெளியிட்டு உள்ளது.இந்தப் பட்டியலில், தென் கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா, கத்தார் மற்றும்ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற் றுள்ளன.ஆனால், இந்தியா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 139 நாடுகளில் 131-ஆவது இடத்தையே பெற்றுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் 106-வது இடத்தையும், நேபாளம் 120-வது இடத்தையும் பிடித்து,இந்தியாவை விட வெகுதூரம் முன்னேறியுள்ளன.இந்தியா, சராசரியாக 12.34எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத் தையும், 4.52 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பெற்றுள்ளதாக ஓக்லா குறிப்பிட்டுள்ளது.நிலையான பிராட்பேண்ட் வேக வரம்பில் மட்டும் இந்தியா சற்று ஆறுதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக 176 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட நிலையில், 48.99 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகம் மற்றும்45.65 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத் துடன் 66-ஆவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.