திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

‘ரபேல்’ வந்தது மகிழ்ச்சி ஆனால், ஊழல் ஊழல்தான்.... ராகுல் காந்தி மீண்டும் அதிரடி

புதுதில்லி:
ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில்,36 ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில், மோடி அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்கள் வெளியாகின.

ஆனால், அதனை தனக்குள்ள அதிகாரம் மூலமாக மோடி அரசு மூடி மறைத்து விட்டது. நீதிமன்ற விசாரணையிலும் தப்பியது.தற்போது மோடி அரசு போட்டஒப்பந்தப்படி, முதற்கட்டமாக 5 ரபேல் விமானங்கள் இந்தியாவை வந்தடைந்துள்ள நிலையில், அதனை தனது சாதனையாகவும் மோடி கூறிவருகிறது.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரபேல் போர் விமானங்கள் வந்து சேர்ந்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ரபேல்கொள்முதல் தொடர்பாக மீண்டும்கேள்விகளை எழுப்பியுள்ளார். 

“ரபேல் போர் விமானத்தைவாங்கிய இந்திய விமானப் படைக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால், 526 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தை எதற்காக1,670 கோடி ரூபாய் கொடுத்துவாங்கினீர்கள்? 126 விமானங்களுக்கு பதிலாக ஏன் வெறும் 36 விமானங்கள் மட்டும் வாங்கப்பட்டுள்ளது? எச்ஏஎல் நிறுவனத் திற்குப் பதிலாக வங்கி மோசடியில் ஈடுபட்ட அனில் அம்பானிக்கு30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த காண்ட்ராக்ட்டை ஏன்கொடுத்தீர்கள்?- எனது இந்த மூன்று கேள்விகளுக்கும் மத்தியஅரசு பதில் சொல்ல வேண்டும்”என்று டுவிட்டரில் பதிவிட்டுள் ளார்.

;