tamilnadu

img

தங்க கடத்தல்: சுங்கத்துறை உதவி ஆணையர் இடமாற்றம்.... பாஜக தலைவர்கள் விசாரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை

கொச்சி:
தங்க கடத்தல் வழக்கில் ஜனம் டிவிஒருங்கிணைப்பு ஆசிரியர் அனில் நம்பியாரை விசாரித்த உதவி ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை நடந்த சோதனைகளுக்கு தலைமை வகித்தவர் தடுப்பு பிரிவின்உதவி ஆணையர் என்.எஸ் தேவ். அவர்தற்போது சுங்கத்துறையின் சட்டப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக உதவி ஆணையர் டி.ஆர்.ராஜிபொறுப்பேற்றார்.அனில் நம்பியாரின் விசாரணையில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தலைநகரில் இன்னும்சில பாஜக தலைவர்களை விசாரிக்க விசாரணைக் குழு நகர்ந்து வருவதால் தேவின் மீதான இந்த நடவடிக்கை வந்துள்ளது. கண்காணிப்பிற்காக அனில் நம்பியார் கொச்சியில் காவலில் வைக்கப்பட்டது தேவின் இடமாற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. அனில் நம்பியாருக்கு எதிராக ஆதாரங்களை சேகரிக்க அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

தங்கக் கடத்தல் வழக்கில் அனில் நம்பியாரை விசாரித்த பின்னர், விசாரணைக் குழுவை சீர்குலைக்க நடவடிக்கை எடுப்பதற்கான அறிகுறிகள்இருந்தன. சுங்கத்துறை ஆணையரிடமிருந்து சனியன்று ஒரு சுற்றறிக்கையை விசாரணைக் குழுவின் தலைவர் பெற்றிருந்தார். விசாரணைக் குழுஎவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்என்றும் சில மாற்றங்கள் தேவைப் படும் என்பதற்கான அறிகுறிகள் அதில்காணப்பட்டன.தங்கக் கடத்தல் வழக்கு விசாரணைக்கு பின்னர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். பாஜக தலைமையுடன் தொடர்புடைய சந்தீப் நாயர் அதுகுறித்து சில தகவல்களை விசாரணை அதிகாரிகளிடம் அளித்தபோது முதல் இடமாற்றம் நடந்தது. விசாரணைக் குழுவின் இரண்டு கண்காணிப்பாளர்கள் உட்பட கொச்சி தடுப்புபிரிவின் 8 உறுப்பினர்கள் இடமாற்றம்செய்யப்பட்டனர். பின்னர், இணைஆணையர் அனீஷ் பி ராஜன் நாக்பூருக்கு மாற்றப்பட்டார்.  தங்க கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற முதல்வர் அலுவலகம் தலையிடவில்லை என்று ஊடகங்களுக்குச் சொன்னதன் பெயரில் அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.