மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் ஆர்.எஸ்.எஸ்-யும் ஒப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தியின் அவதூறு பேச்சுக்கு சிபிஎம் மத்தியக்குழு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
கேரளத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் நேற்று கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆர்.எஸ்.எஸ் உடன் ஒப்பிட்டு, இரண்டும் ஒரே கருத்தியலில் செயல்படுவது போல் அவதூறு பரப்பும் வகையில் பேசியிருந்தார்.
இவரது இந்த பேச்சிற்கு சிபிஎம் மத்தியக்குழு கடும் கண்டங்களை தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் சிபிஎம் இயக்கத்தையும் ஒரே தட்டில் வைத்து ராகுல் காந்தி பேசியுள்ளார். இது முட்டாள்தனமானது மட்டுமல்ல; கண்டிக்கத்தக்கது. கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக யார் போராடுகின்றனர் என்பதை ராகுல் காந்தி மறந்துவிடுகிறார்.
காவி பயங்கரவாத தாக்குதல்களில் ஏராளமான அர்ப்பணிப்பு மிக்க உயிர்களை சிபிஎம் இழந்துள்ளது. அதே சமயத்தில் காங்கிரசும் ஆர்.எஸ்.எஸ்-ம் ஓரே விதமான கம்யூனிச எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். கேரளாவில் காலடி வைத்தவுடன் ராகுல் காந்தியும் அதே மொழியைப் பேசுகிறார். என சிபிஎம் மத்தியக்குழு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது