tamilnadu

சுடுகாடு நிலம் ஆக்கிரமிப்பு சிபிஎம் போராட்ட எதிரொலியால் அரசு நடவடிக்கை

சேலம், செப். 15- சுடுகாடு நிலம் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்திற்கு திட்டமிட்டிருந்த நிலையில், கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சேலம் மாநகரம், 37வது கோட்டம், தாதம்பட்டி, காந்தி நகர் மற்றும் பெருமாள் கோவில் மேடு காந்திஜி காலனி மக்க ளுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்குட்பட்ட நிலத்தை ஆக்கி ரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மயான சுற்றுச்சுவர் வேண்டும் என்ற கோரிக்கையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாநகர கிழக்கு தாதம்பட்டி கிளை சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில், போராட்ட எதிரொலியாக கோட்டாட்சி யர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், 30 நாட்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அனைத்து இடங்களும் மீட்டு தரப்படும் என்ற உத்தரவாதம் அழித்தனர். இதன டிப்படையில், போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப் பட்டது. இப்பேச்சுவார்த்தையில் தாதம்பட்டி கிளைச் செய லாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.