நெல்லை இளைஞர் கவின் கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித் மற்றும் அவருடைய தந்தை சரவணனை 2 நாட்கள் சிபிசிஐடி கவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 27ஆம் தேதி பாளையங்கோட்டையில் இளைஞர் கவின் செல்வகணேஷ் சுர்ஜித் என்பவரால் சாதி ஆணவப்படுகொலை கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் இருவரையும் மேலும் விசாரிக்க தேவையுள்ளதாக சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை பரிசீலித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.
சிபிசிஐடி, இருவரிடமிருந்தும் வழக்கின் பின்னணி, திட்டமிடல், தொடர்புடையவர்கள் மற்றும் ஆதாரங்கள் குறித்த கூடுதல் தகவல்களை பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.