tamilnadu

img

பரவும் மர்ம காய்ச்சல்: பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை, ஜன.1- உடுமலை அருகே பரவி வரும் மர்ம  காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக் காததைக் கண்டித்தும், சுகாதாரமான குடிநீர், முறையான சிகிச்சை அளிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த அம்மாபட்டி கிராமத்தில் 600க் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 10 நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வரு கிறது.குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், மற்றவர்களுக்கு பரவி விடுகிறது. இதனால் தொடர்ந்து கடுமையான உடல் வலி, குளிர் காய்ச்சல் ஏற்படுகிறது.இவ்வாறு தற் போது சிறு குழந்தைகள் முதல் வய தானவர்கள் வரை 200க்கும் மேற் பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் ஜல்லிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு செல்கின்ற னர்.இவர்களில் 60க்கும் மேற்பட் டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுகுறித்து காய்ச்சலால் பாதிக் கப்பட்டவர் கூறுகையில், திருமூர்த்தி அணை திட்டத்தின் கீழ் கிராமத்தில் உள்ள 600 குடும்பங்களுக்கும் ஒரே  ஒரு பொது குழாய் மூலம் குடிநீர் விநி யோகிக்கப்படுகிறது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இன்று வரை வழங்கப்படவில்லை. குடிநீர் பற்றாக் குறை காரணமாக அம்மாபட்டியில் உள்ள குளத்தில் இருந்து பிற தேவை களுக்கு தண்ணீர் எடுத்து வருகி றோம். சமீபகாலமாக அம்மாபட்டி குளத்தில் சாக்கடை கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள் கலந்து வரு கிறது. இதன் காரணமாக குளத்தில் துவைக்க, குளிக்க செல்வோருக்கு காலில் வீக்கம் ஏற்படுகிறது. தொடர்ந்து காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளி டம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் 5 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர்கள் வரை காய்ச்சல் பரவி வருகிறது.  மேலும் கிராமத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலருக்கு காலில் வீக்கத்தால் நடமாட முடி யாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர் என்றார். இந்நிலையில் அம்மாபட்டி கிரா மத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். மர்ம காய்ச்சலை ஒழிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடுமலை-அம்மா பட்டி சாலையில் பொதுமக்கள் மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு சென்ற அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்த பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

;