tamilnadu

கிறிஸ்துமஸ் விழா

 தஞ்சாவூர், டிச.24- தஞ்சை மாவட்டம், பேரா வூரணி ஆதனூரில் கிறிஸ்து மஸ் ஐக்கியகீத ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபை ஆதனூர் சேகரசபையும், ஆதனூர் ஆர்சி சபையும் இணைந்து நடத்திய கிறிஸ்து மஸ் நிகழ்ச்சி ஆதனூர் தூய யோவான் ஸ்நானகன் தேவா லயத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு சிஎஸ்ஐ உதவி குரு டி.சார்லஸ் தேவ ராஜ், ஆர்சி பங்கு தந்தை ஏ.எம். லூர்துசாமி அடிகளார் இருவரும் இணைந்து கிறிஸ்துமஸ் செய்தி அறி வித்தனர். இருசபை பாடல் குழுவினர்களும் கிறிஸ்து மஸ் பாடல்கள் பாடி, கிறிஸ்து மஸ் நிகழ்ச்சியை கொண் டாடி மகிழ்ந்து வாழ்த்துகளை தெரிவித்தனர். சுமார் 40 ஆண்டுகளாக இரு சபை மக்களும் ஒன்று கூடி கிறிஸ்து மஸ் விழா கொண்டாடி வருகின்றனர்.