tamilnadu

img

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் உலக போலியோ தினம்

சிதம்பரம் வீனஸ் பள்ளியில்  உலக போலியோ தினம்

சிதம்பரம், அக் 24- சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக போலியோ தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வீனஸ் கல்விக் குழுமத்தின் நிறுவனர்  வீனஸ் எஸ். குமார்  தலைமை தாங்கி மாணவர்களுக்கு போலியோ நோயின் தாக்கம் மற்றும் அதைத் தடுப்பதில் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளியின் முதல்வர் த. நரேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு  மாணவர்களுக்கு உறுதிமொழி வாசித்தனர்.மாணவர்கள் அனைவரும் “இரண்டு துளி வாழ்க்கை துளி – ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு முறையும்” என்ற உறுதிமொழியை கொண்டனர்.