பெண் விடுதலை வேண்டும் நூல் வெளியீட்டு விழா
அருட்பணி ராபர்ட் வறுவேல் எழுதி பாரதி புத்தகாலயம் - இந்தியன் யூனிவர்ஸிடி பிரஸ் பதிப்பித்துள்ள "பெண் விடுதலை வேண்டும்" (Women's Liberation: A Must) ஆங்கில நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (ஆக. 29) சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தமுஎகச திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் கிளை நடத்திய இந்த விழாவில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மெய்யியல் துறை உதவி பேராசிரியர் ஏ.டி.ரேவதி நூலை வெளியிட சென்னைப் பல்கலைக்கழகம் ஆங்கிலத் துறைத் தலைவரும், துணை வேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான பேராசிரியர் எஸ். ஆம்ஸ்ட்ராங் மற்றும் மருத்துவர் சீ. ச. ரெக்ஸ் சற்குணம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்வில் தமுஎகச மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் நாடகவியலாளர் நா. பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.