உங்களுடன் ஸ்டாலின்’திட்ட முகாம் ரிஷிவந்தியம் தொகுதியில் தொடக்கம்
கள்ளக்குறிச்சி, ஆக.20 - கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றியம், கூவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ரிஷிவந்தியம் ஒன்றியம், மையனூர் தேவாலயம் அருகில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “இந்த முகாம்களில் 13 அரசு துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளை சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகிறது. மேலும் முகாமில் பெறப்படும் மனுக்கள் முறையாக பரிசீலனை செய்து தகுதியான நபர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் கொண்டு சேர்க்கப்படும். இம் முகாமில் மகளிர் உரிமை தொகை பெறாத மகளிர் உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து வழங்கி பயன்பெற வேண்டும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உரிய ஆவணங்களுடன் முறையாக விண்ணப்பித்து தகுதியின் அடிப்படையில் அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார். இம் முகாமில் திருக்கோவிலூர் துணை ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.