கேபிள் டிவி தொழிலையும், ஆபரேட்டர்களையும் அரசு பாதுகாக்குமா?
சென்னை, அக்.6- தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் மாநிலத்தின் முதன்மையான அமைப்பாக 15 ஆயிரம் உறுப்பினர்களுடன் 220 தாலுகாகளில் செயல்பட்டு வருகிறது. தற்போது இத்தொழில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவ தால், ஆபரேட்டர்கள் அரசிடம் தீர்வு கோரி போராடுகின்றனர். அரசு கேபிள் டிவி நட்டத்தில் சிக்கல் மல்டி லெவல் ஆபரேட்டர்களாக தனியாரும் தமிழக அரசும் ஒளிபரப்பு சேவை வழங்கி வருகின்றனர். அரசு கேபிள் டிவி நிறுவனம் மிகுந்த நட்டத் தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மந்திரா என்ற தனியார் நிறுவனத் துடன் ஒப்பந்தம் செய்து, ஒவ்வொரு செட்டாப் பாக்ஸுக்கும் ரூ.30 வாடகை செலுத்துகிறது. இந்த ஒப்பந் தம் 36 மாதங்களுக்குப் பிறகு புதுப் பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தெரி வித்த விவரப்படி, அரசு கேபிள் டிவி கட்டணம் ரூ.86.60, செட்டாப் பாக்ஸ் வாடகை ரூ.30, பிஎஸ்என்எல் டேப்பிங் கட்டணம், தாலுகா பராமரிப்பு, கட்டண சேனல்கள் மற்றும் நிர்வாக செலவுகள் என ஒரு இணைப்புக்கு கூடுதலாக 60 ரூபாய் ஆகிறது. இத னால் மாதம் 8 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. ஒரே பேக்கேஜ் மற்றும் எச்டி சேனல்கள் இல்லாததால் வாடிக் கையாளர்கள் DDH நிறுவனங்களுக்கு மாறுவதால் ஆபரேட்டர்களுக்கு வருமான இழப்பு அதிகரிக்கிறது. மந்திரா நிறுவனத்தின் நிர்பந்தம் செட்டாப் பாக்ஸ்களை அனை வரும் கண்டிப்பாக வாங்க வேண்டும், ஒரு பாக்ஸுக்கு ரூ.500 முன்பணம் செலுத்த வேண்டும் என்று மந்திரா நிறு வனம் ஆபரேட்டர்களை நிர்பந்திக் கிறது. மறுக்கும் ஆபரேட்டர்களை வட்டாட்சியர்கள் மூலம் மிரட்டுகின் றனர். பல ஆண்டுகளாக தொழில் செய்யும் பகுதிகளில் புதியவர்க ளுக்கு உரிமம் வழங்கி தொழில் நெருக்கடியை உருவாக்குகின்றனர். வங்கிக் கடன் பெற்று தருவதாகக் கூறி, அதில் செட்டாப் பாக்ஸ்களை வாங்க வேண்டும் என்று நிர்பந்திக்கின் றனர். வங்கிக் கடன் வருவதற்கு முன்பே ஆபரேட்டர்களின் வாலட்டில் பணம் வரவு வைக்கப்பட்டு பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கையால் எந்த வங்கிக் கணக்கில் இருந்து வந்தது, யாருக்கு திருப்பி செலுத்துவது என்ற குழப்பம் நிலவுகிறது. முந்தைய ஆட்சியில் வாங்கி தேங்கிப் பாழ டைந்த செட்டாப் பாக்ஸ்களை விற்ப தற்காக ஆபரேட்டர்களை நிர்பந்திப் பதை தடுக்க வேண்டும். வாரிய தலைவரின் அத்துமீறல் அரசு கேபிள் டிவி தலைமை அலுவலகத்தில் மந்திரா நிறுவன ஊழியர்களுடன் சிலர் ஆபரேட்டர் களை மிரட்டுவது தொடர்கதையாக உள்ளது. கம்பிவட தொழிலாளர் மற்றும் ஆபரேட்டர்கள் நல வாரிய தலைவர் ஜீவா, நலவாரியப் பணி களில் ஈடுபடாமல் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் போல செயல்படுகிறார். அனைத்து விவ காரங்களிலும் தலையிட்டு தமிழகம் முழுவதும் இடையூறுகளை செய்கிறார். இவர் மந்திரா மற்றும் குஜராத் GTPL நிறு வனங்களுக்கு துணை நிற்கிறார். மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 2,000 பேர் மட்டுமே வாரிய உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உறுப்பினர்களைச் சேர்க்க வாரிய தலைவர் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. 15,000 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலத்தின் முதன்மையான தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்திற்கு வாரியத்தில் பிரதிநிதித்துவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் ஊழல் நடைபெறுகிறது 150க்கும் மேற்பட்ட உள்ளூர் சேனல்கள் இலவசம் என அறிவித்த தால் அரசு கேபிள் டிவிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் சேனல்களிடம் வசூலிக் கப்படும் பணம் எங்கே போகிறது என்பது தெரியவில்லை. மந்திரா நிறு வனத்துடன் இணைந்து அரசு கேபிள் டிவியை மூடும் வேலை நடைபெறு கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. நீதிமன்ற வழக்கு பிரச்சனை அரசு கேபிள் டிவிக்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்ச கம் தற்காலிக உரிமம் வழங்கியது. மதுரை உயர்நீதிமன்ற கிளை 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வழக்கில், ஒளிபரப்பு உரிமம் வழங்கியதற்கு ஆட்சேபனை தெரிவித்து டிசம்பர் 2023க்குள் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. ஒளிபரப்பு தொடர்வதால் 2025 செப்டம்பர் 5ஆம் தேதி மீண்டும் தொட ரப்பட்ட வழக்கில், செப்.8அன்று அரசு கேபிள் டிவி நிறுவனம் புதிய இணைப்புகளை வழங்க தடை விதிக் கப்பட்டது. வருகிற அக்.13 அன்று இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப ரேட்டர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். போராட்டம் அறிவிப்பு இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண துறை அமைச்சர், அதிகாரிகள், கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மாநில முதலமைச்சரை சந்தித்து பிரச்சனைகளை விளக்க நான்கு மாதங்களாக அனுமதி கேட்டு காத்தி ருந்தனர். அனுமதி கிடைக்காத நிலை யில், இன்று (அக்டோபர் 6) அரசு கேபிள் டிவி நிறுவனத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக் கான ஆபரேட்டர்கள் மற்றும் ஊழி யர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற் கின்றனர்.
