tamilnadu

img

கேரளாவை போல் தமிழக பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க வலியுறுத்தல்

சென்னை, செப்.4 உலக பாலியல் தினத்தை யொட்டி சென்னை வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்து வமனையில் பாலியல் விழிப்புணர்வு பிரச்சார மனித சங்கிலி, கையெ ழுத்து இயக்கம், பாலியல் வன்கொடு மைகளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு ஆகியவை நடைபெற்றது.  இதுகுறித்து உலக பாலியல் சங்க பாலியல் உரிமை குழு உறுப்பினர் டாக்டர் டி.காமராஜ், மீடியா கமிட்டி தலைவரும், அசோசியேட் செயலா ளருமான டாக்டர் கே.எஸ்.ஜெய ராணி காமராஜ் ஆகியோர் கூறுகையில்,  பாலியல் விஷயங்க ளையும், பாலியல் உணர்வு களையும் மூடி மூடி வைப்பதால் அநாகரீகமாக வெறித்தனத்தோடு வெளிப்பட்டு பாலியல் வன்முறை யாக உருவெடுக்கிறது. இந்த சமூக கொடுமையிலிருந்து மீள முறை யான பாலியல் கல்வி தேவைப்படு கிறது. அதற்காகத்தான் கடந்த சில  தினங்களுக்கு முன்பாக கேரள உயர்நீதிமன்றம், பள்ளிக்கூட பாடத் திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள அரசுக்கு உத்தர விட்டுள்ளது.  இதனை நாங்கள் மன ப்பூர்வமாக வரவேற்கிறோம். இதே போல் தமிழகத்தில் பள்ளிக்கூட பாட த்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க வேண்டும் என வலியுறுத்து கிறோம் என்றனர்.

வெற்றிமாறன்

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தி னராக பங்கேற்ற இயக்குனர் வெற்றி மாறன் பேசுகையில், பாலியல் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு வருக்கும் இருக்க வேண்டியது மிக மிக அவசியமானது. அதனை வலியு றுத்தி ஒவ்வொரு ஆண்டும் உலக  பாலியல் தினம் கொண்டாடப் படுவதும், அதற்கான விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டு வருவதும் பாராட்டுக்குரியது என்றார். பாலியல் சிறுபான்மையினர் மற்றும் திருநங்கைகள் கவுரவமாக நடத்தப்பட வேண்டும். அவர்களது உரிமைகளை அவர்கள் பெறு வதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

பாண்டியராஜன்

இயக்குநர் பாண்டியராஜன் கூறு கையில், பாலியல் சம்பந்தமான ஒரு குறும்படத்தை நான் தயாரித்தேன். இதற்காக நான் கடுமையான எதிர்ப்பு களை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடுமையான முயற்சிக்குப்பிறகு அந்த குறும் படம் அபார வெற்றி அடைந்தது. உலகம் முழுவதிலும் ஏறக்குறைய 2.80 கோடி பேர் யூடியூபில் இப் படத்தை பார்த்துள்ளனர் என்றார்.

நீதிபதி விமலா

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியும், மாநில சட்ட கமிஷன் உறுப்பினராக பொறுப்பு வகித்து வருபருமான எஸ்.விமலா பேசுகையில், செக்ஸ் என்றாலே தீண்டத்தகாத வார்த்தையாகவும், அசிங்கமாகவும், அநாகரீகமாகவும் நினைக்கிறோம். ஆனால், இன்டர் நெட்டில் அனைத்தும் வெளிப்படை யாக இருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகள் இதனால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். உடலுறவு என்றாலே என்ன வென்று தெரியாமல், தேவை யில்லாமல் கர்ப்பம் அடைகிறார்கள். தகுதி வாய்ந்த மருத்துவர்களை சந்திக்க அஞ்சி, மருத்துவ அறிவு இல்லாத போலியானவர்களிடம் கரு கலைப்பு செய்து கொள்கிறார்கள். இதனால் உயிருக்கே ஆபத்தா கிறது. எனவே பாலியல் விழிப்பு ணர்வு அவசியம். பாலியல் கல்வி, பாலியல் சமத்துவம், பாலியல் உரிமைகளை நிலைநாட்டுவது, இது தான் இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார். இவ்விழாவில் தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்க (ஆக்சி) தலைவர் டாக்டர். ஆர்.பிரேமலதா, சென்னை மெனோ பாஸ் சங்க தலைவர் டாக்டர். என்.ஹெப்சிபா கிருபாமணி ஆகியோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர். முடிவில் டாக்டர் நிவே திதா காமராஜ் நன்றி கூறினார்.


 

;