சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இருந்த என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் இன்று நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் கடந்த செப்.15-ஆம் தேதி பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைக்கு கடந்த செப்.25 குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதாக ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கூடுதல் நீதிபதிகளாக இருந்த என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
