ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை வந்த பெண் ஒருவர் காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை செவ்வாயன்று (செப். 30) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் எம். பிரகலநாதன், கே. வாசுகி, தமிழ்ச்செல்வி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தலித் விடுதலை இயக்கம், மாதர் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்திக்க சென்றபோது போலீசார் அனுமதிக்க மறுத்ததை கண்டித்து, மருத்துவமனை வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
