tamilnadu

img

ராஜ்ய சபையிலும் மெஜாரிட்டி இல்லை

“ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் இனிமேலும் பாஜகவை ஆதரிப்பதில்லை என்று அறிவித்திருக்கிறார். தன் கட்சியான பிஜு ஜனதா தளத்தின் 9 ராஜ்ய சபை உறுப்பினர்களும் வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். ராஜ்ய சபையின் 245 இடங்களில் ஐந்து காலியாக இருக்கின்றன. எனவே பெரும்பான்மைக்கு 121 உறுப்பினர்கள் வேண்டும். பிஜேபிக்கு 97 உறுப்பினர்கள்தான் இருக்கின்றனர். நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மற்ற கட்சிகளை நம்பித்தான் பிஜேபி ஆட்சியை நடத்த வேண்டும்” என்று மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.