தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்
திருவண்ணாமலை, ஜூலை 19- திருவண்ணாமலை மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது. கலசப்பாக்கம் வட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியிடம் தீக்கதிர் சந்தா வழங்கப்பட்டது. இதில், மாநிலக்குழு உறுப்பினர் எம். சிவக்குமார். மாவட்டச் செயலாளர் பி. செல்வன், மூத்தத் தலைவர் எம். வீரபத்திரன், மாவட்ட தலைவர்கள் ஏ. லட்சுமணன், கே.கே.வெங்கடேசன், டி.கே.வெங்கடேசன், பி. சுந்தர் மற்றும் இடைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதேபோல், திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை ஆண்டு சந்தாவை மாவட்டச் செயலாளர் ப.செல்வனிடம் வழங்கினார். செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமதாஸ், மாவட்டக்குழு உறுப்பினர் ச.குமரன், ஒன்றிய செயலாளர் ஜி.பன்னீர்செல்வம், சத்யா, ப.கோதண்டம் ஆகியோர் உடன் இருந்தனர்.