சென்னை,ஜூலை 2 சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட ஒன்னரை வயதுகுழந்தைக்கு கையில் டிரிப்ஸ் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கை அழுகியது. இதனால் அந்த பாகத்தை மருத்துவர்கள் அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அந்த குழந்தை எழும்பூர்குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, குழந்தைக்கு மயக்க மருந்து கொடுக்கப் பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2 மணி நேரம் அறுவை சிகிச்சையில் குழந்தையின் அழுகிய கை அகற்றப்பட்டது. இதன் பின்னர் குழந்தை தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ள னர்.