ஆசிரியர்கள் இயக்க கூட்டு குழு மறியல் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் இரா. அண்ணாதுரை தலைமையில் நடந்த இந்த மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் அந்தோணி ராஜ், மாவட்டச் செயலாளர் வெங்கடபதி, மாவட்டத் தலைவர் சாந்தி, மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.