சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளதாக டீ, காபி வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
டீ மற்றும் காபி அருந்துவது பலருக்கும் தினசரி பழக்கமாக உள்ளது. சிலர் ஒருவேளை உணவுக்குப் பதிலாகவும் டீ, காபி அருந்துவதை நாம் காண முடிகிறது.
இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து செலவு உள்ளிட்டவை அதிகரித்துள்ளதால், சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளதாக டீ, காபி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஒரு கோப்பை டீ ரூ.12-இலிருந்து ரூ.15 ஆகவும், ஒரு கோப்பை காபி ரூ.15-இலிருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது
