ரேசன் கடைகளில் தடையின்றி பொருட்களை வழங்க வேண்டும் தாம்பரம் மாதர் சங்க மாநாடு கோரிக்கை
சென்னை, ஜூலை 28- ரேசன் கடைகளில் தடையின்றி பொருட்களை வழங்க வேண்டுமென்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தாம்பரம் பகுதி மாநாடு வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் 5வது பகுதி மாநாடு ஞாயிறன்று (ஜூலை 27) தேவநேசன் நகரில் நடைபெற்றது. மாநாட்டில், தாம்பரம் மாநகராட்சி முழுவதும் குடியிருக்கும் மக்களுக்கு நில வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதோடு, போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், உட்புறச் சாலைகளை சீரமைக்க வேண்டும், தெருநாய் தொல்லை யை கட்டுப்படுத்துவ தோடு, தெருக்கள் தோறும் கண்காணிப்பு கேமிராக் களை காவல்துறை பொருத்த வேண்டும், பார்வதி நகர் கால்வாயை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு பகுதி தலைவர் ஏ.பிரேமாவதி தலைமை தாங்கினார். சங்க கொடியை பாப்பா ஏற்றினார். துணைத்தலை வர் பி.சாந்தி அங்சலி தீர்மானத்தை வாசித்தார், பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.சித்ரா வரவேற்றார். தென்சென்னை மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பிச்சையம்மாள் மாநாட்டை தொடங்கி வைத்தார். வேலை அறிக்கையை பகுதிச் செயலாளர் ஆர்.விஜயாவும், வரவு செவு அறிக்கையை பொருளாளர் இ.பிரேமலதாவும் சமர்ப்பித்தனர். முறைசாரா சங்க மாவட்டத் தலைவர் டி.ஏ.லதா உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி நிறைவுரையாற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் பி.வசந்தா நன்றி கூறினார். பகுதித் தலைவராக பி.வசந்தாவும், செய லாளராக ஏ.பிரேமாவதியும், பொருளாளராக டி. ஜெயந்தியும் தேர்வு செய்யப் பட்டனர்.
குடியிருப்பு பகுதியில் குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் ஞாயிறன்று (ஜூலை 27) மயிலாப்பூர் வீரபெருமாள் கோவில் தெருவில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விவேகானந்தபுரம் குடியிருப்போர் நலச் சங்கமும், மயிலாப்பூர் காவல் நிலையமும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் குடியிருப்புவாசிகள் கலந்து கொண்டனர். குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் ப.கண்ணன், செயலாளர் பா.நீலகண்டன், காவல் நிலைய ஆய்வாளர் ஜி.அம்பேத்கர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.