tamilnadu

தொடர்ந்து தற்கொலைக்கு முயலும் மாணவிகள்: நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

தொடர்ந்து தற்கொலைக்கு முயலும் மாணவிகள்: நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

கடலூர், அக்.18- மேல்பட்டாம்பாக்கம் பள்ளி விடுதியில் தொடர்ந்து மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வலி யுறுத்தியுள்ளது. சிபிஎம்  நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் ஸ்டீபன் ராஜ் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 14.10.2025 அன்று மேல்பட்டாம்பாக்கம் பெண்கள் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி கனிமொழி மாடியில் இருந்து கீழே விழுந்து இரண்டு கை மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு தொடர்ந்து மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. கட்சியின் சார்பாக பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்தாரை நேரில் சந்தித்து விசாரணை செய்யப்பட்டது. கவலைக்குரிய வகையில், தொடர்ந்து அந்த பள்ளியில் 3 மாணவி கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள னர். மேலும், ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த பள்ளியின் விடுதியில் கோவாஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து இறந்தார். அதற்கான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிபிஎம் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளன. பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு முழு மருத்துவ செலவையும் உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் இனியும் ஏற்படாத வகையில் தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட பள்ளி கல்வித்துறை நிர்வாகம் இந்த பள்ளியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாத வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தனித்தனியாக கவுன்சிலிங் வழங்கிட வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.