tamilnadu

img

ஆற்றில் குளிக்கச் சென்ற  மாணவன் சடலமாக மீட்பு

ஆற்றில் குளிக்கச் சென்ற  மாணவன் சடலமாக மீட்பு

கள்ளக்குறிச்சி, அக்.12 -  வாணாபுரம் அருகே திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நண்பருடன் குளிக்கச்  சென்ற எத்திராஜ் என்ற மாணவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் நீண்ட  நேரத் தேடுதலுக்குப் பின் சடலமாக மீட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் செந்தில், பிரியா என்ற தம்பதியினர் வசித்து வரு கின்றனர். இவரது மகன் எத்திராஜ் என்பவர், மணலூர் பேட்டை அருகே உள்ள கூவனூர் கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி பத்தாம் வகுப்பு பயின்று வருவதாகக் கூறப்படு கிறது. எத்திராஜ் என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் திரு வரங்கம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதாகக் கூறிவிட்டுச் சென்றதாகத் தெரி விக்கப்படுகிறது. இதனையடுத்து, சாமி தரிசனம் செய்து விட்டு தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளான். அப்போது தென்பெண்ணை ஆற்றில் அதிக நீர் வந்ததால் எத்திராஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட் டான். சங்கராபுரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீய ணைப்புத் துறையினர் நீண்ட நேரத் தேடுதலுக்குப் பின்பு  எத்திராஜ் என்ற மாணவனைச் சடலமாக மீட்டனர். தொடர்ந்து  மணலூர்பேட்டை காவல்துறையினர் எத்திராஜின் உடலைக்  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.