கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி
காஞ்சிபுரம், செப். 17 - தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு 7 நாள்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என தொழிலாளர் நல உதவி ஆணையர் பா.லிங்கேஸ்வரன் அறிவித்துள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையுடன் இணைந்து நடத்தப்படும் இந்த பயிற்சி மேசன், கார்பெண்டர், எலெக்டிரீசியன், பார்பெண்டர், பிளம்பர், வெல்டர், கொல்லர், ஏசி மெக்கானிக், கண்ணாடி வேலை, பெயிண்டர், டைல் லேயர் ஆகிய 11 பிரிவுகளில் அளிக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 650 பேருக்கு ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி நடைபெறும். பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ், மதிய உணவு மற்றும் நாளொன்றுக்கு ரூ.800 வீதம் ஏழு நாள்களுக்கான மொத்த ரூ.5,600 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி பெற விரும்புவர்கள் ஆதார், நல வாரிய அட்டை, புகைப்படம், வங்கிக் கணக்குப் புத்தக நகல்களுடன் காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
கழிவுநீர் கால்வாய் அமைக்கும்போது எரிவாயு விநியோக குழாய் சேதம்
காஞ்சிபுரம், செப் 17- காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் பகுதியில் பூமிக்கு அடியில் குழாய் பதித்து அப்பகுதி மக்களுக்கு திங்க் கியாஸ் என்ற தனியார் நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது கவனக் குறைவாக செயல்பட்டதால் எரிவாயு குழாயில் சேதம் ஏற்பட்ட எரிவாயு வெளியேறியதால் உடனடியாக விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. திங்க் கியாஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் சேதத்தை உடனடியாக சரி செய்து மீண்டும் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் தொடங்கியது. நடப்பு சட்டத்தின்படி ஐபிசி பிரிவு 285 மற்றும் 336-ன் கீழ், அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளால் ஏற்படும் சேதங்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, மற்றும் ரூ.25 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். எரிவாயு குழாய் பதிக்கப்பட்டுள்ள இடத்தில் குழாய் தோண்டினால் திங்க் கியாஸ் (நிறுவனத்தின் கட்டணமில்லா எண். 1800-2022-999 மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
ஒய்31 மாடல் ஸ்மார்ட்போன்கள்: இந்தியாவில் விவோ அறிமுகம்
சென்னை, செப். 17- விவோ, இந்தியாவில் அதன் புத்தம் புதிய ஒய்31 மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் விவோ ஒய்31 மற்றும் விவோ ஒய்31 புரோ ஆகியவை அடங்கும். இன்றைய பயனர்களின் தேவைகளை அறிந்து வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள், ஸ்டைல், வலிமை மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றை ஒருங்கே கொண்டுள்ளது. அதிநவீன அம்சங்கள், சக்திவாய்ந்த செயலிகள் மற்றும் தொழில்துறையில் முன்னணி நீடித்த உழைப்புடன், ஒய்31 தொடர் அன்றாட நம்பகத்தன்மை மற்றும் அடுத்த நிலை பொழுதுபோக்குகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 6500 எம்ஏஎச்பேட்டரி, 44 வாட்ஸ்ஸ்மார்ட் ப்ளாஷ்சார்ஜ், ஐபி68 &ஐபி69 மற்றும் 50எம்பிஎச்டிஇமேஜிங் சிஸ்டம், பின்புற கேமராவின் 4கேவீடியோ பதிவு திறன்கள் மற்றும் சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளது.
ஒய்31 மாடல் ஸ்மார்ட்போன்கள்: இந்தியாவில் விவோ அறிமுகம்
சென்னை, செப்.17- பொதுமக்களின் அனைத்துத் தேவை களையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உரு வாக்கப்படும் என்று தமிழ்நாடு அர சின் நிதிநிலை அறிக்கையில் அறி விக்கப்பட்டிருந்தது. அதன்படி, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி 2000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 5 இடங்களை அடை யாளம் காணப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு அந்த அறிக்கை டிட்கோவுக்கு சமர்பிக்கப்பட்டது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.