பாலியல் தொல்லை ஆசிரியர் கைது
சென்னை, ஆக. 16- சென்னை கொடுங்கை யூரில் சிறுவனுக்கு பாலி யல் தொல்லை கொடுத்த தாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபராஜ் (41). இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி யில் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். மேலும் மாலையில் தனது வீட்டில் டியூஷன் நடத்தி வருகிறார். இந்த வகுப்பு அந்த பகுதி யைச் சேர்ந்த பல மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். ஜெபராஜ் தன்னிடம் டியூஷன் படிக்க வரும் 14 வயது சிறுவனுக்கு அண்மையில் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், ஜெபராஜ் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை சனிக்கிழமை கைது செய்தனர்
தங்கம் விலை நிலவரம்
சென்னை, ஆக.16- சென்னையில் சனிக் கிழமை 24 கேரட் தங்கம் 1 கிராம் விலை ₹10,118 ஆக இருந்தது, இதேபோல் 22 கேரட் தங்கம் விலை 1 கிராம் ₹9,275 ஆகவும், இருந்தது. வெள்ளிக்கிழமை விலையை விட சற்று குறைந்துள்ளது.