tamilnadu

img

பாலியல் தொல்லை: சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது குண்டாஸ்

கோவையில் பாலியல் தொல்லையால் சின்மயா பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
கோவையில் சின்மயா பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக, 17 வயது பள்ளி மாணவி வீட்டில் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக, காவலர்கள், போக்ஸோ வழக்குப் பதிவு செய்து, ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி, பள்ளி முதல்வா் மீரா ஜாக்சன் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். பள்ளி முதல்வா் மீரா ஜாக்சனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்தது. இந்நிலையில் ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தியை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து காவலர்கள் மிதுன் சக்ரவா்த்தியிடம் 2 நாள்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த மிதுன் சக்ரவர்த்தி, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், காவல்துறையினர் அவர் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எடுத்துள்ளனர்

;