எஸ்.இளங்கோவனின் பணி நிறைவு பாராட்டு விழா
அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் முன்னணி ஊழியர் எஸ்.இளங்கோவனின் பணி நிறைவு பாராட்டு விழா செவ்வாயன்று (ஜூலை 1) கிளாம்பாக்கம் பணிமனை வளாகத்தில் நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் நினைவு பரிசு வழங்கி எஸ்.இளங்கோவனை கவுரவித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார், சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.