tamilnadu

img

மாங்கூழ் தொழிற்சாலை அமைத்திடுக வேலூர்-அணைக்கட்டு தாலுகா மாநாட்டில் தீர்மானம்

மாங்கூழ் தொழிற்சாலை அமைத்திடுக வேலூர்-அணைக்கட்டு தாலுகா மாநாட்டில் தீர்மானம்

வேலூர், அக்.12 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,அகில இந்திய விவசாயிகள் சங்கம் வேலூர்- அணைக்கட்டு தாலுகா மாநாடு அரியூரில் நடைபெற்றது. தாலுகா தலைவர் சி.எஸ்.மகாலிங்கம் தலைமை தாங்க, என்.கன்னியப்பன்  வர வேற்றார். மூத்த தோழர் ஜி.நரசிம்மன் சங்கக் கொடியை ஏற்றி வைக்க ஆர்.டீக்காராமன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.முன்னாள் மாநில செயலாளர் எஸ் தயாநிதி துவக்கவு ரையாற்ற, மாவட்ட செயலாளர் கே.சாமி நாதன் நிறைவுறையாற்றினார்.தாலுகா செய லாளர் வசந்தகுமார் வேலை அறிக்கை யையும், பி.கண்ணன் வரவு செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசு ராமன் வாழ்த்துரை வழங்க முடிவில் கே.கண்ணன் நன்றி கூறினார். தீர்மானம்  விவசாயிகளுக்கு எதிரான மின்சார சட்டத்தை திரும்ப பெற வேண்டும், கணியம்பாடி பகுதியில் அரசு விவசாய கல்லூரி அமைக்க வேண்டும்,மேலரசம் பட்டில் உத்திரகாவேரி ஆற்றில் நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும். அணைக் கட்டு பகுதியில் மல்லிகை விளைச்சலை மையப்படுத்தி சென்ட் தொழிற்சாலையும்,  மாவட்ட அளவில் மா தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் நிலையில் மாங்கூழ் தொழிற் சாலையும் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.