சென்னை:
தெற்கு வங்கக் கடலில் புயல் உருவாக உள்ள நிலையில், கன்னியாகுமரியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.4 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மீனவர்கள் 200 விசைப் படகுகளில் கடந்த சில தினங் களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்றனர். குஜராத், கோவா,மகாராஷ்டிரா மற்றும் ஈரான் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மீன்பிடித்து வரும் நிலையில் புயல் தொடர் பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.தகவல் தொடர்பு கருவிகள் இருந்த 150 விசைப்படகுகள் பல்வேறு பகுதிகளில் கரை ஒதுங்கிய நிலையில், இதுபோன்ற கருவிகள் இல்லாத 50 விசைப்படகுகளைத் தேடவும், படகுகளில் உள்ள ஆயிரம் மீனவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.