ஆர்கே நகரில் ரேசன் கடை திறப்பு
ஆர்.கே.நகர் 41ஆவது வட்டம் நேரு நகர் பகுதியில் ரூ.28.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர் திறந்து வைத்தார். இதில் மண்டலக் குழு தலைவர் நேதாஜி யூ.கணேசன், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், நிர்வாகிகள் ஏ.விஜய், என்.திருமுருகன், உதவி பொறியாளர் சத்யன் அமுதம், கற்பகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.