அகில இந்திய பொது வேலை நிறுத்த விளக்க பொதுக்கூட்டம்
44 தொழிலாளர்கள் நல சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9 நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்த விளக்க பொதுக்கூட்டம் திருவெற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே எஸ்.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயராமன், பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர்.முத்துசாமி, எஸ்.கதிர்வேல், சுரேஷ்பாபு (சிபிஎம்), கே.சுரேஷ் (அசோக் லேலண்ட்), நாராயணன் (கார்ப்போரன்டம்), பி.அலமேலு (மாதர் சங்கம்), ஸ்ரீனிவாசன் (கட்டுமான சங்கம்) கே.வெங்கடய்யா, சத்தியமூர்த்தி (மின் ஊழியர் மத்திய அமைப்பு), அகல்யா (மாணவர் சங்கம்), சேகர் (போக்குவரத்து) ஆகியோர் பேசினர்.