tamilnadu

img

குடிமனை பட்டா கேட்டு மனுக்களோடு போராட்டம்

குடிமனை பட்டா கேட்டு  மனுக்களோடு போராட்டம்

திருவண்ணாமலை, செப்.30- நில உரிமை, குடிமனை பட்டா, அனுபவத்தில் உள்ள கோவில் நிலங்களுக்கு பட்டா கேட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் செவ்வா்யன்று (செப்.30)  நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பெ.கணபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் பட்டா கேட்டு கோரிக்கை மனுக்களோடு வந்து கலந்துக்கொண்டனர். இதில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப.செல்வன், வழக்கறிஞர் எஸ்.அபிராமன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.லட்சுமணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.கே.வெங்கடேசன், துணைத் தலைவர்கள் எம்.பிரகலநாதன், ஆர்.அண்ணாமலை, சிஐடியு நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், இரா.பாரி, விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.அருண், சிபிஎம் வட்டார செயலாளர்கள் பி.சுந்தர், பன்னீர்செல்வம், அப்துல்காதர், ரவிதாசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ச.குமரன், சி.எம்.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை விவசாய சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், மக்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். முன்னதாக போளூர் சாலை மின்வாரிய அலுவலகம் அருகில் இருந்து நடைபெற்ற பேரணியில் ஏராளமான பொதுமக்கள் செங்கொடியுடன் கலந்து கொண்டனர்.