tamilnadu

img

கவின் ஆணவக்கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கவின் ஆணவக்கொலையை  கண்டித்து ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த பொறியாளர் கவின் செல்வகணேஷ் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஓசூர் ராம்நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாநகரச் செயலாளர் ஹரி நந்தா தலைமையில் நடைபெற்ற ஆரப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், மாநகர செயலாளர் நாகேஷ் பாபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் முரளி, தலைவர் ஆனந்தகுமார், துணைச் செயலாளர் ரவி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஸ்ரீதரன், துணைத் தலைவர் பி.ஜி.மூர்த்தி, வாலிபர் சங்க தேன்கனிக்கோட்டை தலைவர் புருஷோத்தம ரெட்டி, ஒன்றியச் செயலாளர் சங்கர், மாதர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாநகரத் தலைவர் வள்ளி ஆகியோர் கலந்துகொண்டனர்.