tamilnadu

img

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலை

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலை

திருவள்ளூர், அக்.23- வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் 4,480 தன்னார்வ லர்களை களமிறக்கி அனைத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை யும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ள தாக மாவட்ட ஆட்சி யர் மு.பிரதாப் தெரி வித்துள்ளார். செவ்வாயன்று இரவு ஊத்துக்கோட்டை மற்றும் ஆவடி பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கு அதிக மாக மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 75 மில்லிமீட்டர் மழை பதி வானது. அதிக பாதிப்புக் குள்ளாகும் 47 பகுதிகளுக்கு தனி அலுவலர்கள் நிய மிக்கப்பட்டு அனைத்து துறைகளையும் ஒருங்கி ணைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.தேங்கிய தண்ணீரை விரைவாக வெளியேற்ற பல்வேறு திறன் கொண்ட நீரேற்று இயந்திரங்கள், மரம் அறுக்கும் தானியங்கி இயந்திரங்கள், போன் லைன், ஜேசிபி ஆகியவை தயார் நிலையில் உள்ளன. காவல்துறை எஸ்.டி.ஆர்.எஃப் குழு, 135 விரைவு மறுமொழி மருத்துவ குழுக்கள், 75 காய்ச்சல் முகாம்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. முதல் மறுமொழியாளர் கள் என்ற பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் மத்திய அரசின் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் 500 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள 130 கிலோமீட்டர் மழைநீர் வடிகாலில் 95 கிலோமீட்டர் தூர்வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் இரண்டு நாட்களில் நிறைவடையும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.