காட்டுமன்னார்கோவிலில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
சிதம்பரம், அக்.9- காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் தற்போது சம்பா சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் நாற்றாங்கால் விடுபட்டும், சில இடங்களில் நாற்று நட்டு பயிர்கள் பச்சை பிடித்து வளர்ந்து வருகிறது. மழையின் காரணமாக நெற்பயிர் நடவு செய்துள்ள நிலங்களுக்குள் இரண்டு அடிக்கு மேல் மழை நீர் தேங்கி நின்றது. குறிப்பாக ஆட்சியாள்புரம், கஞ்சாங்கொல்லை, குச்சிபாளையம், புத்தூர், ஈச்சம்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் முன்னூறு ஏக்கருக்கு மேல் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தன. மழைநீரை உடனடியாக வடிய வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையறிந்த மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்திரவின் பேரில், சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்த ரூபன் வியாழக்கிழமை (அக்.9) கஞ்சங்கொல்லை, கொண்டாயிருப்பு, சிறு காட்டூர், ஆச்சாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால் களை ஆய்வு செய்தார். கீழணை உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன், வல்லம்படுகை உதவி பொறியாளர் ரமேஷ் ஆகி யோர் கொண்ட பொதுப் பணித்துறை அதிகாரிகள் குழு வினர் சம்பந்தப்பட்ட கிராம பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கீழணை யில் இருந்து பிரியும் கஞ்சங்கொல்லை வாய்க்கால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை தூர்வாரப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் தேங்கி யுள்ளதைக் கண்டறிந்தனர். பிறகு, தூர்வாரும் பணியை தொடங்கினர்.
அறிவிப்பு
அஞ்செட்டி வட்டம் கோட்டையூரில் எண்.1/92 ல் மாதய்யா மகன் மாதய்யா (சுமார் 80 வயது) 07.04.2016 அன்று இயற்கை எய்தினார்.மேற்படி தேதியில் இறந்த தன் தந்தை மாதய்யாவின் இறப்பு சான்று கோரி அவரது மகன் M.முணுமாதன் 09.09.2025 ல் அஞ்செட்டி வட்டாட்சியரிடம் மனு செய்துள்ளார். வட்டாட்சியர் இது குறித்து விசாரணை செய்திட வருவாய் ஆய்வாளருக்கு 18.09.2025ல் பரிந்துரைத்துள்ளார். இதில் யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் உடனடியாக தெரிவிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. இப்படிக்கு. M.முணுமாதன், Slo.மாதய்யா (Late) கோட்டையூர். இறந்தவர் (தந்தை)பெயர் : மாதய்யா தாயார் பெயர் : ராமம்மா மனுதாரர் பெயர் : எம்.முணுமாதன் இருப்பிடம்: கோட்டையூர்.அஞ்செட்டி வட்டம்.கிருஷ்ணகிரி மாவட்டம்.
