விவசாய தொழிலாளர்கள் நடைபயணம் வெற்றி
வாழ்வாதார கோரிக்கைகளை தீர்க்க அதிகாரி உறுதி
திருவண்ணாமலை, ஜூலை 7- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் வசிக்கும் விவசாய தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதார கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்திக்க நடைபயணம் துவங்கி னர். தண்டராம்பட்டு தாலுகாவில் வாழவச்ச னூர், வானபுரம், தென்டி முயனூர், தானிப்பாடி, சாத்தனூர், எடத்தனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்க ளுக்கு வீடு மற்றும் வீட்டு மனை பட்டா கேட்டு கடந்த 2024 ஆம் ஆண்டு வட்டாட்சி யரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ராதாபுரம் ஏரிக்கரை பகுதியில் வசிக்கும் ஆதி வாசி பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை ரத்து செய்து பழங்குடி மக்களை அல்லல் படுத்தும் வருவாய்த்துறை நிர்வாகத்தை கண்டித்தும் விவசாய தொழிலாளர்கள் இந்த நடைபயணத்தை மேற்கொண்டனர். தண்டராம்பட்டு பேருந்து நிலையம் அருகே துவங்கிய இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இரா.அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் பி.கணபதி, செயலாளர் கே.கே.வெங்கடேசன், துணைத் தலைவர் எம்.பிரகலநாதன், துணைத் தலைவர் ஏ.லட்சுமணன், மாணவர் சங்கம் மாவட்ட செய லாளர் வி.கோபி, மாற்றுத் திறனாளிகள் சங்க வட்டார செயலாளர் சாரவள்ளி, சிஐடியு நிர்வாகி ஆர்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடைபயணத்தை துவக்கிய விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் தண்ட ராம்பட்டு வட்டாட்சியர் துரைராஜ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் மீது விரைவில் உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து தற்காலிகமாக நடைபயண இயக்கத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.