அம்மனேரி முதல் மடூகூர் சாலை சீரமைக்க அதிகாரிகள் உறுதி
திருவள்ளூர், செப்.12- திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மனேரி முதல் மடூகூர் செல்லும் 4 கிலோ மீட்டர் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதில் சுமார் 300 மீட்டர் தூரம் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் சாலை அமைந்துள்ளது. வனத்துறையினர் சாலை அமைக்க அனுமதி மறுப்பதால், கடந்த 20 ஆண்டுகளாக சாலை அமைக்க முடியாமல் உள்ளது. மற்றும் அம்மனேரி யில் மலைபுறம்போக்கு நிலத்தில் 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க வனத்துறையினர் தடையில்லா சான்று வழங்க வேண்டும். மற்றும் அம்மனேரி ஏரிக்கரை சாலை, சுடுகாட்டு சாலை அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (செப்.11), ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலு வலகத்தில் குடியேறும் போராட்டம் மேற்கொள்வது என பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் சங்க தலை வர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்றுள்ளனர். அப்போது, ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் உள்ளே செல்ல விடாமல் அனைவரையும் கைது செய்துள்ளனர். இதற்கு சங்க தலைவர்கள் கைது செய்து மாலையில் விடுவித்தால் நாங்கள் யாரும் வீட்டிற்கு செல்லமாட்டோம். பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர். இந்த நிலையில் அனைவரையும் தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர், வனத்துறையினர், பிடிஒ, காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அம்மனேரி ஏரிக்கரை சாலை, சுடுகாட்டு பாதை விரைவில் அமைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளித்தனர். வனத்துறையினர் தடையில்லா சான்று 15 நாட்களில் வழங்கவும் மேலும் மலை புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கு பட்டா வழங்கும் வகையில், வனத்துறையினர் தடையில்லா சான்று வழங்கவும் உத்தரவாதம் அளித்தனர். விவசாயிகள் சங்கத்தின் வட்டச்செய லாளர் குப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், பொரு ளாளர் சி.பெருமாள், பகுதி நிர்வாகி வித்யா, சிபிஎம் வட்ட செயலாளர் சிவபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.