உதகை தாவரவியல் பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை
உதகை, ஜூன் 4– தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணி நடப்பதை யொட்டி குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு சுற்றுலாப் பய ணிகள் செல்ல தடை விதித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா வில் நடப்பாண்டு மலர்கண்காட்சி மே, 10 ஆம் தேதி யன்று துவங்கி, 26 ஆம் தேதி நிறைவடைந்தது. மலர் கண்காட்சியை காண, மே மாதத்தில், 2.41 லட்சம் சுற்று லாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். மலர் கண்காட்சியின் போது, அவ்வப்போது மழை பெய்தது. மழையை பொருட்படுத்தி கொண்டு சுற்று லாப் பயணிகள் மலர்களை ரசிக்க பூங்காவுக்கு வந்த னர். மழைக்கு பச்சை பசேலென இருந்த பிரதான புல் தரை மைதானம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக ரித்ததால் சேறும், சகதியாக மாறியது. இந்நிலையில், பள்ளி திறப்பு தள்ளி போனதால் தற்போது கணிசமான சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகின்றனர்.
ஆனால், பூங்கா நிர்வாகம் பராமரிப்பு பணி மேற் கொள்வதை காரணம் காட்டி சில பகுதிகளுக்கு சுற்று லாப் பயணிகளை அனுமதிப்பதில்லை. இதனால், பூங் காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மலர் கண்காட்சிக்காக உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டணம் இன்னும் குறைக்கப்படாததால் பூங் காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி தெரி வித்து வருகின்றனர்.
காவலர் சுட்டு தற்கொலை
கோவை, ஜூன் 4- கோவை விமான நிலைய கழிவறையில் சிஐஎஸ்எப் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை கொண் டார்.
கோவை விமான நிலையத்தில் செவ்வாயன்று காலை 9 மணி அளவில் விமான நிலைய கழிவறை யில் இருந்த துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. உடனடி யாக அங்கு சென்று பாதுகாப்புத் துறையினர் மற்றும் ஊழியர்கள் பார்த்தனர். அப்பொழுது, சிஐஎஸ்எப் காவ லராக பணி புரிந்து வந்த ஜி.சக்ரதார் (34) தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடனே பீளமேடு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் கோவை விமான நிலையம் சென்ற பீளமேடு காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான கார ணம் தெரியவில்லை. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
சிறப்பு மண் பரிசோதனை முகாம்
நாமக்கல், ஜூன் 4- வேளாண்மை துறையின் சார்பில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள சிறப்பு மண் பரிசோ தனை முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தலைமையி டமாக கொண்டு வேளாண் துறையின் கீழ் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் இயங்குகிறது. இதன் மூலம் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயி களிடமிருந்து மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்கின்றனர். பின்னர் மண் வள அட்டை அன் றைய தினமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகி றது. மேலும் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாக னம் மூலம் 2024-25 ஆம் வருடத்தில் இதுவரை 5 முகாம் கள் மூலமாக 173 மண்மாதிரிகளும், 53 நீர் மாதிரிகளும் ஆய்வு செய்து முடிவுகள் மண்வள அட்டையாக வழங் கப்பட்டுள்ளன.
2024-25 ஆம் வருடத்தில் ஜூன் மாதத்தில் 6 ஆம்தேதி முதல் மோகனூர் வட்டத்தில் செங்கப்பள்ளி கிராமம், 11 ஆம் தேதி பரமத்தி வட்டத்தில் பரமத்தி கிராமம், 19 ஆம் தேதி நாமகிரிப்பேட்டை வட்டத்தில் கார்கூடல்பட்டி, 26 ஆம் தேதி திருச்செங்கோடு வட்டத்தில் புதுப்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணியிலிருந்து இம்முகாம் நடைபெற உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.