பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார்நிலையில் உள்ளது அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை, அக்.19- பருவமழையை எதிர் கொள்ள மின்சார வாரியம் தயார்நிலையில் உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின் சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்துள் ளார். பருவமழையை எதிர் கொள்வதற்கான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள், ஏற்பாடுகள் குறித்து ஞாயி றன்று (அக்.19) தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வாரியத் தலைவர் ஜெ. ராதாகிருஷ் ணன் உடன் இணைந்து அமைச்சர் ஆய்வு செய்தார். அதன்பின், மின் தடங்கல் மற்றும் புகார்களை கையாள மின்னகத்தில் கூடுதலாக 10 பேர் நியமிக்கப்பட் டுள்ளனர். எனவே, புகார் அளிக்க காத்திருப்பு நேரத்தை 20 நொடிகளிலி ருந்து 10 நொடிகளாகக் குறைக்க வேண்டும். புகார்களை உடனடியாக சரி செய்து, புகார்தாரரிடம் தொடர்புகொண்டு சரி செய்யப்பட்டதை உறுதி செய்த பின்னரே புகார்களை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். துணை மின் நிலையங் களில் டீசல் ஜெனரேட்டர், நீர் வெளியேற்றும் மின் மோட்டார்கள் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மின் தடங்கல் ஏற்படின் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசு அலு வலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படை யில் மின்சாரம் தர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உயர் அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கம், தீயணைப்பு துறையின ருடனும் தொடர்பில் இருக்க வேண்டும். அலைபேசியை அனைத்து வைக்கும் அலு வலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். 94 பாதுகாப்பு குழுக்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 2 ஆயிரத்து 303 பில்லர் பாக்ஸ்கள் தரைமட்டத்தி லிருந்து ஒரு மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட் டுள்ளது. பூமிக்கு வெளியே தெரிந்த புதைவட கம்பி இணைப்புகள் 3ஆயிரத்து 400 இடங்களில் சரி செய்ய ப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 11 ஆயிரத்து 435 மின்மாற்றி கள், 3.30 லட்சம் மின் கம்ப ங்கள், 8 ஆயிரத்து 500 கி.மீ. மின் கம்பிகள், ஆயிரத்து 500 புதைவட கம்பிகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் கையிருப்பில் உள்ளது. ஒவ்வொரு கோட்டத் திலும் 15பேர் அடங்கிய இரண்டு பாதுகாப்பு குழுக்க ளும், உயர் அழுத்தப் பாதை கள், மின் கோபுரங்கள், வழித் தடங்களில் ஏற்படும் பழுது களை சரி செய்ய 79 குழுக்களும் அமைக்கப்பட் டுள்ளது என்று தெரி வித்தார். பொதுமக்கள் கவனத்திற்கு... பொதுமக்கள், மின் கம்பி அறுந்து கிடக்கும் பகுதி, மின்கேபிள், மின் கம்பம், பில்லர் பாக்ஸ், டிரான்ஸ்பார் மர் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். சாலை, தெருக்களில் உள்ள மின்கம்பம், மின் சாதனம் அருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பது, விளை யாடுவது, வாகனத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வாக உள்ள மின்கம்பிகள் அருகே செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும். ஈர கைகளால் சுவிட்சு கள், மின்சார சாதனங்களை இயக்க வேண்டாம். வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். மின்சார கம்பம் அல்லது அதற்கான ஸ்டே வயரின் மீது கொடி கட்டி துணி காய வைப்பது, கால் நடைகளை கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். மின் சேவைகள் மற்றும் மின் தடை குறித்த புகார் களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரி வித்துளளார்.
