அமைச்சர் நாசர் நிவாரண உதவி
ஆவடி காந்தி நகரில் வெற்றி (30), முருகன் (50), கௌரி (37) ஆகியோர் குடும்பத்துடன் வாடகைக்கு குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளிகள். இந்நிலையில் சனிக்கிழமை மேற்கண்ட 3 பேரும் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். மாலையில் 3 குடிசை வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் 3 வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. புகாரின் அடிப்படையில் ஆவடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் அரசு சார்பில் தலா 10 ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் 3 குடும்பத்துக்கும் வழங்கினார். இதில் ஆவடி வட்டாட்சியர் காயத்ரி, மண்டலக்குழு தலைவர் என்.ஜோதிலட்சுமி, உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.
