உழவர் கரையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் அதிகரித்து வரும் பெண்கள் மீதான குற்றங்களை தடுக்க கோரியும், குடியிருப்பு பகுதியில் உள்ள ரெஸ்ட்ரோபார்களை தடை செய்ய வேண்டியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் இந்திரா காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் முனியம்மாள் தலைமையில் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் உரையாற்றினார். செயலாளர் இளவரசி, நிர்வாகிகள் சத்யா, உமா, ஜானகி, தாரா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.