tamilnadu

img

வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் மாதர் சங்க மாநாடு வலியுறுத்தல்

வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் மாதர் சங்க மாநாடு வலியுறுத்தல்

சிதம்பரம், ஜூலை 28- சிதம்பரம் பகுதியில் நீர்நிலை ஆக்கிர மிப்பு என வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் 17-வது நகர மாநாடு நடைபெற்றது.   மாநாட்டிற்கு நகரத் தலைவர் எம்.அமுதா தலைமை தாங்கி னார்.  மாதர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் எஸ்.ஞானமணி மாதர் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். சங்கத்தின் மாநில தலைவர் எஸ். வாலண்டினா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.  நகர செயலாளர் வி. மல்லிகா வேலை அறிக்கை வாசித்தார்.  நகர பொருளாளர் கவிதா வரவு செலவு கணக்குகளை  சமர்ப்பித்தார். மாவட்ட செயலாளர் பி.மாதவி,  நகர்மன்றத் துணைத் தலைவர் எம். முத்துக்குமரன்,  மருத்துவர் எஸ்.ஜீவரத்தினம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ராணி.  மாணவர் சங்க நகர செயலாளர் சபரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப்பேசினார்கள்.  புதிய நிர்வாகிகள்  மாதர் சங்கத்தின் சிதம்பரம் நகர புதிய தலைவராக எஸ். பாரதி,  செயலாளராக எம். அமுதா,  பொருளாளராக பி. தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 15 பேர் கொண்ட நகர் குழு தேர்வு செய்யப்பட்டன.   புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகி களுக்கு வாழ்த்துக்களைக் கூறி  சங்கத்தின் கடலூர் மாவட்ட துணை தலைவர் பி. தேன்மொழி சங்கத்தின் செயல்பாடுகள் கடந்த காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளுக்கு மாதர் சங்கம் எவ்வாறு போராடியதை சுட்டி காட்டி  பேசினார்.  கடலூர் மாவட்ட த்தில் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்திட வேண்டும்,  சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்,  அண்ணாமலை நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.