புதிய காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்தது எல்ஐசி
சென்னை, ஜூலை 8- எல்ஐசி நிறுவனம் நவ் ஜீவன் நவ், ஜீவன் ஒற்றை பிரீமியம் ஆகிய புதிய காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றை எல்ஐசியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) சத் பால் பானு அறிமுகம் செய்தார். இந்த 2 திட்டங்களும் சேமிப்பு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்பவை. நவ் ஜீவன் (912) குறிப்பிட்ட கால தொடர் பிரீமியம் எண்டோவ்மென்ட் திட்டம். குறைந்தபட்ச நுழைவு வயது 30 நாட்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். பிரீமி யங்களை 6, 8, 10 ஆண்டுகள் என்ற அடிப்படையில் செலுத்தலாம். அதிகபட்ச வயது 60. 12 ஆண்டு பிரீமியம் செலுத்த விரும்பினால், அதிக பட்ச நுழைவு வயது 59. பிரீமியம் செலுத்தும் ஆண்டு களைப் பொறுத்து குறைந்தபட்ச பாலிசி காலம் 10 முதல் 16 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்படும். அதிகபட்ச பாலிசி காலம் 20 ஆண்டுகள். குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ.5லட்சம். இதுபோல், நவ் ஜீவன் ஒற்றை பிரீமியம் (911) திட்டம், உத்தரவாதமான கூடுதல் தொகைகளுடன் கூடிய ஒற்றை பிரீமியம் எண்டோவ்மென்ட் திட்டம். தொடக்கத்திலிருந்து பாலிசி காலம் முடியும் வரை ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடி விலும், உத்தரவாதமான கூடுதல் தொகை ஆயிரம் ரூபாய் அடிப்படைக் காப்பீட்டுத் தொகைக்கு ரூ.85 என்ற விகிதத்தில் சேர்க்கப்படும். குறைந்தபட்ச நுழைவு வயது 30 நாட்கள். விருப்பம் 1ன் கீழ் அதிகபட்ச நுழைவு அதிக பட்ச நுழைவு வயது 60 ஆகவும், விருப்பம் 2ன் கீழ் 40 வய தாகவும் இருக்கும். பாலிசி காலம் குறைந்தபட்ச 5 ஆண்டுகள்; அதிகபட்சம் 20 ஆண்டுகள். குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம் . மேலும் விவரங்களுக்கு www.licindia.in-ல் உள்ள விற்பனை கையேட்டை பார்க்கலாம் என எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. '
விண்ணப்பங்கள் வரவேற்பு '
செங்கல்பட்டு, ஜூலை 8- செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 23.06.2025 முதல் 31.07.2025 முடிய நடைபெற்று வருகிறது. இச்சேர்க்கைக்கு 8ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாண வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள 9499055673 அல்லது 9962986696 என்ற கைபேசி எண்ணிற்கோ அல்லது துணை இயக்குநர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், முதல்வர் அவர்களையோ நேரில் தொடர்பு கொள்ளலாம். என அரசினர் தொழிற்பயிற்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் கஞ்சா கடத்திய 2பேர் கைது
சோழிங்கநல்லூர், ஜூலை 8- ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்த னர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 5வது நடைமேடையில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பினாங்கினி அதிவிரைவு ரயிலில் இருந்து இறங்கிய இரு வரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். அப்போது, இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து, போலீசார் பையை சோதனை செய்தபோது கஞ்சா பார்சல் சிக்கியது. இதை யடுத்து, போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், சிவகங்கை மாவட்டம், நேரு பஜார் பகுதியை சேர்ந்த விஷ்ணு வரதன்(23), திருப்புவனம் தாலுகாவை சேர்ந்த ஹேம்நாத் பாபு(22) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். மேலும், 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ரயிலில் சிக்கி சிஐஎஸ்எப் தலைமை காவலர் உயிரிழப்பு
சென்னை, ஜூலை 8- ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் படலா போலையா(53). இவர் அரக்கோணத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை யில் தலைமை காவலராக பணிபுரிந்தார். இந்நிலையில், படலா போலையா வேலைக்கு செல்ல திங்களன்று கூடூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது, தில்லியில் இருந்து வந்த திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார். சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து படலா போலையா இறங்க முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து ரயிலில் சிக்கி னார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணி கள், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி படலா போலையா பலியானார்.