tamilnadu

img

‘இந்தியா’ அணி வெற்றி உறுதி வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருப்போம்! ஆர்.எஸ். பாரதி பேட்டி

சென்னை, ஜூன் 1- வாக்கு எண்ணிக்கையின் போது எச்ச ரிக்கையுடன், விழிப்புடன் இருக்க வேண் டும் என்று ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் வாக்கு எண்ணும் மைய முகவர்களை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகு திகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடை பெற்றது. இதற்கான முதற்கட்ட வாக்குப்  பதிவு ஏப்ரல் 19 அன்று தொடங்கிய நிலை யில், இறுதி மற்றும் 7-ஆம் கட்ட வாக் குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதியோடு நிறை வடைந்தது.

இந்த தேர்தலில் நாடு முழு வதும் பதிவான வாக்குகள் ஜூன் 4 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்குப்பதிவின் போது பயன்  படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகள் அனைத்  தும், ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் அறைக் குள் பலத்த பாதுகாப்புடன் தற்போது வைக்கப்பட்டுள்ளன.  

இந்நிலையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டா லின் அறிவுறுத்தலின்படி, வாக்கு எண்ணிக்  கையின் போது திமுக மற்றும் கூட்டணி கட்சி களின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சனிக்கிழமையன்று (ஜூன் 1) காணொலி மூலம் நடைபெற்றது.  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.  பாரதி தலைமையில் வாக்கு எண்ணிக்கை  மைய முகவர்களுக்கான பயிற்சி முகா மில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பங்கேற்  றனர். திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ பயிற்சியளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  ஆர்.எஸ். பாரதி, “வாக்கு எண்ணிக்கை  நாளன்று பாஜக எதை வேண்டுமானா லும் செய்யும்.

எனவே, வாக்கு எண்ணிக்கை யின் போது எச்சரிக்கையுடன், விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி  வெற்றி பெறும். வெற்றி பெறுபவர்கள் தான்  எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முக வர்களுக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால் செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்று  கூறப்பட்டுள்ளது. எதையும் சந்திக்க தயா ராக இருக்கிறோம்” என்றார். மேலும், “பிரதமர் மோடி போட்டியிடும்  வாரணாசி தொகுதிக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆனால், அவர் கட வுளைப் போல அமர்ந்து தியானம் செய்வது  போன்று பிரச்சாரம் செய்கிறார். இதுதொடர்  பாக அளிக்கப்பட்ட புகாரை தேர்தல் ஆணை யம் நிராகரிக்கிறது.இதுவரை எந்த ஜன நாயக நாட்டிலும் இப்படி நடந்தது இல்லை”  என்றும் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டார்.

;