லஷ்மி விலாஸ் வங்கியை வங்கியை DBS வங்கி ஏற்கும் திட்டத்தை கைவிட்டு பொதுத்துறை வங்கியுடன்
இணைக்க வேண்டும் என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பொதுச்செயலாளர் ராஜகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழகம் உள்பட 16 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் 563
கிளைகளுடன் பல பகுதிகளில் 94 வருடங்களாக செயல்பட்டு வரும் லஷ்மி
விலாஸ் வங்கியின் செயல்பாட்டிற்கு 17.11.2020 முதல் வர்த்தகத் தடையை
விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. வங்கியின் நிதி நிலைமையில் ஏற்பட்டிருக்கும்
மோசமான சரிவினால்தான் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக ரிசர்வ்
வங்கியின் பத்திரியை செய்தி தெரிவித்துள்ளது. வங்கியின்
வாடிக்கையாளர்கள் யாவரும் தங்கள் கணக்கிலிருந்து 16.12.2020 வரை
அதிகபட்சமாக ரூ.25,000-க்கும் மேல் பணம் எடுக்க முடியாது. லஷ்மி விலாஸ்
வங்கியை சிங்கப்பூரை தலைமையமாகக் கொண்டு செயல்படும் ஞிஙிஷி
வங்கியுடன் இணைக்கும் திட்டத்தையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாகவே லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடும் மற்றும்
நிதிநிலைமையும் திருப்திகரமாக இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு
வரைமுறையற்று கடன் வழங்கியதும், அதை கறாராக வசூலிக்க
தவறியதும்தான் இந்த வங்கியின் சீரழிவுக்கு முக்கியமான காரணமாகும்.
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உடனடியாக தலையிட்டு அதனை சரிசெய்ய
முயற்சிக்கவில்லை. இதன் காரணமாக வங்கியிலுள்ள பல லட்சக்கணக்கான
வாடிக்கையாளர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சீணிஷி வங்கி என்ற தனியார் வங்கியும், ஞிபிதிலி, மிலி&திஷி போன்ற
வங்கிகளல்லாத நிதி நிறுவனங்களும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து
வரும் சூழ்நிலையில் லிக்ஷிஙி வங்கியை வெளிநாட்டு தனியார் வங்கியுடன்
இணைப்பதற்கான மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முயற்சி தவறான
போக்காகும். 33 கிளைகளுடன் இயங்கிவரும் ஞிஙிஷி வங்கி, லிக்ஷிஙி
வங்கியை எடுத்துக் கொள்வதால் வாடிக்கையாளர்களின் சேமிப்பு
பாதுகாக்கப்படாது. சுமார் 60% கிளைகளை கிராமப்புறத்திலும், சிறு
நகரங்களிலும் கொண்டுள்ள லிக்ஷிஙி வங்கியின் கிளைகள் பெருமளவு
மூடப்படும் ஆபத்து உள்ளது. அங்கு பணிபுரியும் 4,000 ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகளின் பணிப்பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே லிக்ஷிஙி
வங்கியை ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைப்பதுதான் பொருத்தமாக
இருக்கும்.
எனவே இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாடு கீழ்க்கண்ட
கோரிக்கைகளை முன்வைக்கிறது:
* லிக்ஷிஙி வங்கியை ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைக்க
வேண்டும்.
* கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தொகையை கறாராக
வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்கள் (ஷ்வீறீயீuறீ
பீமீயீணீuறீtமீக்ஷீs) மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* லிக்ஷிஙி வங்கியை பொதுத்துறை வங்கியுடன் இணைப்பதால்
பொதுத்துறை வங்கிக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தை அரசு ஏற்க
வேண்டும்.
* லிக்ஷிஙி வங்கியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகளின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
* இந்தியாவில் செயல்படும் அனைத்து தனியார் வங்கிகளையும்
உடனடியாக பொதுத்துறை வங்கிகளாக மாற்ற வேண்டும்.