tamilnadu

img

கோட்டையூர் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குக! ஆதிதிராவிடர் நல ஆணையரிடம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 6 கிருஷ்ணகிரி மாவட்டம்,  அஞ்செட்டி வட்டம் கோட்டையூர் வருவாய் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க புதிதாக நில எடுப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச்செய லாளர் சி.பிரகாஷ் சென்னையில் ஆதி திராவிடர் ஆணையகத்தின் ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்து முறையிட்டார்.

அதில் கோட்டையூர் வருவாய் கிராமத்தில்  ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க 1986 ஆம் ஆண்டு இரண்டு தனிநபர்களிடமிருந்து நில எடுப்பு செய்யப்பட்டது. நில எடுப்பு செய்யப்பட்டதை எதிர்த்து நில உரிமையாளர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல்  செய்தனர்.  அந்த தீர்ப்பில் நிலம் எடுப்பு சம்மந்தமாக அறிவிக்கை  வழங்கப்பட்டபோது வருவாய் பதிவுகளில் உள்ளவர்களுக்கு மட்டும் அறிவிக்கை வழங்கப்பட்டது என்றும் கூட்டு பட்டாவில் உள்ளவர்களுக்கு அறி விக்கை வழங்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம்   2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் நில எடுப்பு நடவடிக்கைகளை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிய அறிவிக்கை வெளியிட்டு புதிய நில எடுப்பு நடவடிக்கைகளை தொடர உத்தரவிட்டது.

ஆனால் இதுநாள் வரை புதிய நிலஎடுப்பு அறிவிக்கை ஏதும் அரசால் வெளியிடப்படவில்லை. கையகப்படுத்தப்பட்ட நிலம் ஆதிதிராவிடர் நத்தம் என்று இருப்பதை கிராம கணக்கு களில் தங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி நில உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று 2021 ஜூன் மாதம் 17ஆம் தேதி அதற்கும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் போராட்டத்தின் காரண மாக புதிதாக நில எடுப்பு நடவடிக்கையை மீண்டும் தொடர அரசிடமிருந்து  உரிய ஆணையை பெற்றுத்தருமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் ஆகி யோர் ஆணையரகத்திற்கு கடிதம் அனுப்பினர். இதன் பின்னரும் உத்தரவு கள் பிறப்பிக்கப்படவில்லை. எனவே கோட்டையூர் வருவாய் கிராம சர்வே எண் 179\1,மற்றும் 180\1ல் புதிய நில எடுப்புக்கான  அறிவிக்கையை அறி வித்து  ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க ஆதிதிராவிடர் நல ஆணையரகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

;